கிறிஸ்துமஸ் மின்
அலங்காரம் - 2017
இந்தியத் திரு
நாட்டின் தென்முனையில் அமைந்துள்ள சிறிய அழகிய இயற்கை வளம் கொழிக்கும் மாவட்டம்
கன்னியாகுமரி. இம்மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள
தோவாளை வட்டத்தின் தலைநகராம் பூதப்பாண்டிக்கு கிழக்கே பழையாற்றுக்கு மேற்கே தாடகை
மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகியக் கிராமம் தான் வடக்கு ஆண்டித்தோப்பு ஆகும்.
இவ்வூரின்
நடுவே கம்பீரமாக 105 அடி உயரக் கோபுரத்துடன் எழும்பி நிற்கும் எழில்மிகு ஆலையம் தான் நாங்கள் பெருமையுடன் பார்க்கும் CSI
ஆலையமாகும். ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் காலங்களில் இவ்வூரின் கிறிஸ்தவ
இளைஞர்கள் உற்சாகமுடன் ஆலையத்தையும், கோபுரத்தையும் சுற்று வட்டாரப் பகுதிகளையும்
அழகுற மின் விளக்குகளால் அலங்கரித்து அக மகிழ்வார்கள். கடந்த 10 ஆண்டுகளாக மிகப்
பெரிய நட்சத்திரங்களை ஆலைய வளாகத்திலும், ஊரின் நுழைவாயிலிலும் நிறுவி
ஆலையத்திற்கும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் பெருமை சேர்க்கிறர்கள். இவ்வருடமும்,
மின் அலங்காரத்தாலும், ஆலையத்தைப் போன்று அமைக்கப்பட்ட குடிலினாலும் மற்றும் மிகப்
பெரிய நட்சத்திரங்களாலும் ஊருக்கும் ஆலையத்திற்கும் பெருமை
சேர்த்துள்ளனர். அதன் ஒளி நாடாவை கீழ்காணும் URL-ஐ சொடுக்கி கண்டு மகிழுங்கள்.
Video will be available live @: https://youtu.be/kXTBoG6wGUI