Posted by : Guna Wednesday, October 15, 2014



பரிசுத்த வேதாகமத்தில் அந்தியோகியா பட்டணம் பற்றிய வசனங்கள்


அப்போஸ்தலர் 6:5 இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியாபட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,
அப்போஸ்தலர் 11:19 ஸ்தேவான் நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் சுவிசேஷ வசனத்தை யூதர்களுக்கேயன்றி மற்ற ஒருவருக்கும் அறிவியாமல், பெனிக்கேநாடு, சீப்புரு தீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள்.
அப்போஸ்தலர் 11:20 அவர்களில் சீப்புருதீவாரும் சிரேனே பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்துக்கு வந்து, கிரேக்கருடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்துப் பிரசங்கித்தார்கள்.
அப்போஸ்தலர் 11:22 எருசலேமிலுள்ள சபையார் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள்.
அப்போஸ்தலர் 11:25 பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப்போய், அவனைக்கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்.
அப்போஸ்தலர் 11:26 அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல்அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.
அப்போஸ்தலர் 11:27 அந்நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள்.
அப்போஸ்தலர் 13:1 அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்.
அப்போஸ்தலர் 13:14 அவர்கள் பெர்கே பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்து, ஓய்வுநாளிலே ஜெபஆலயத்தில் பிரவேசித்து, உட்கார்ந்தார்கள்.
அப்போஸ்தலர் 14:19 பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள்வந்து, ஜனங்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள்.
அப்போஸ்தலர் 14:21 அந்தப் பட்டணத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரைச் சீஷராக்கினபின்பு, லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும்அந்தியோகியாவுக்கும் திரும்பி வந்து,
அப்போஸ்தலர் 14:26 அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின கிரியைக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டுப் புறப்பட்டுஅந்தியோகியாவுக்கு வந்தார்கள்.
அப்போஸ்தலர் 15:22 அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்புகிறது அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும் சபையாரெல்லாருக்கும் நலமாகக்கண்டது. அவர்கள் யாரென்றால் சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்று மறுபேர்கொண்ட யூதாவும் சீலாவுமே.
அப்போஸ்தலர் 15:23 இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள்அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்:
அப்போஸ்தலர் 15:30 அவர்கள் அனுப்பிவிடப்பட்டு, அந்தியோகியாவுக்கு வந்து, சபையைக் கூடிவரச்செய்து, நிருபத்தை ஒப்புவித்தார்கள்.
அப்போஸ்தலர் 15:35 பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங்கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போஸ்தலர் 18:22 செசரியா பட்டணத்துக்கு வந்து, எருசலேமுக்குப் போய், சபையைச் சந்தித்து, அந்தியோகியாவுக்குப் போனான்.
கலாத்தியர் 2:11 மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன்.
II தீமோத்தேயு 3:11 அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவையெல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார்.

தற்போதைய உலக வரைபடத்தில் அந்தியோகியா
அந்தியோகியா (Antioch) என்னும் பழங்கால நகர் இன்றைய துருக்கி நாட்டின் தென் கிழக்குப் பகுதியில், சிரியாவின் வடகிழக்கு எல்லையிலிருந்து 12 மைல் தொலையில் அமைந்த நகரம் ஆகும். இந்நகருக்கு மேற்குப்பக்கத்தில் ஒரோண்டெஸ் (Orontes) என்னும் பேராறு ஓடுவதால் அதற்கு "ஒரோண்டெஸ் கரையில் அமைந்த அந்தியோக்கியா" (Antioch on the Orontes) என்னும் பெயரும் உண்டு.
பழைய நகரான அந்தியோக்கியா புது நகரான "அந்தாக்கியா" (Antakya) அருகே இன்றைய துருக்கி நாட்டில் அமைந்துள்ளது.

அந்தியோகியா உருவான வரலாறு

 கி.மு. 4ஆம் நூற்றாண்டின் இறுதியில் மகா அலெக்சாண்டரின் தளபதிகளுள் ஒருவராகிய முதலாம் செலூக்கஸ் நிக்கட்டோர் என்பவர் அந்தியோகியாவை நிறுவினார். இந்நகரத்தில்தான் கிறித்தவ சமயம் முதலில் யூதர் நடுவிலும் பின்னர் யூதரல்லாத பிற இனத்தவரிடையேயும் கி.பி. முதல் நூற்றாண்டில் முனைப்பாகப் பரவத்தொடங்கியது. அந்தியோகியா பண்டைய சிரிய நாட்டை ஒருங்கிணைத்த நான்கு பெருநகரங்களுள் ஒன்றாகும் (பிற நகரங்கள்: செலூக்கியா, அப்பமேயா, இலவோதிக்கேயா). இந்நகர மக்கள் "அந்தியோக்கியர்" என்று அழைக்கப்பட்டனர். அதன் உச்ச வளர்ச்சியின்போது அங்கே ஐந்து இலட்சம் மக்கள் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டதாலும், மம்லுக் இராணுவம் 1268இல் பேரளவிலான மக்களைக் கொன்றுகுவித்ததாலும் அந்தியோகியா நடுக்காலத்தில் சீரழியத் தொடங்கியது. மங்கோலியர் படையெடுப்பால் வர்த்தக வழிகள் அந்தியோகியாவின் ஊடே செல்ல தடை எழுந்ததும் சீரழிவிற்கு ஒரு காரணமாகும்.அந்தியோகியாவில் கோம்மொதுஸ் என்னும் மன்னன் ஒலிம்பிக் விளையாட்டுகளை  நடத்தினார். கி.பி. 256இல்பாரசீகப் படைகள் அந்தியோகியாவைத் தாக்கி மக்கள் பலரைக் கொன்றன.

கிறிஸ்தவ வரலாற்றில் அந்தியோகியா

          கிறிஸ்தவ சமயம் யூத நாட்டுக்கு வெளியே பரவத் தொடங்கிய காலத்தில் அந்தியோகியா மைய இடமாக அமைந்தது. அந்நகரில் யூத மக்கள் பலர் வாழ்ந்து வந்தனர். யூத மக்களிடையே கிறித்தவ சமயத்தைப் பரப்பும் வண்ணம் பல மறைபரப்பாளர்கள் அந்தியோகியா சென்றனர். இயேசுவின் சீடரான புனித பேதுரு அங்கு சென்று இயேசுவைப் போதித்தவர்களில் மிகவும் முக்கியமானவர். அதன் அடிப்படையில் இன்று அந்தியோகிய சபை தனக்கு மற்ற சபைகளை விட தங்களுக்கு முதன்மையிடம் உண்டு என்னும் கோரிக்கையை எழுப்புகிறது.
    அந்தியோகியாவில் கிறித்தவ சமயத்தைப் பரப்பிய இரு பெரும் மறைபரப்பாளர்கள் பர்னபாபவுல் (பிறப்பு: கி.பி. சுமார் 5; இறப்பு: கி.பி. சுமார் 67) ஆவர். பவுல் இந்நகரத்தில் கி.பி. 47இலிருந்து 55 வரை மறைபரப்பினார். பவுல் கிறித்தவத்தை போதித்த போது மக்கள் கூடி வந்து நற்கருணைக் கொண்டாட்டம் நிகழ்த்திய குகைப் பகுதி இன்றும் அந்தியோகியாவில் உள்ளது.
     புதிய ஏற்பாட்டில் உள்ள ப்போஸ்தலர் நடபடிகைகள் என்னும் நூல் அந்தியோகியாவில் கிறித்தவம் பரவிய வரலாற்றை தெளிவாய் விவரிக்கிறது. அந்தியோக்கியா பற்றிய 16 குறிப்புகள் அந்நூலில் உள்ளன.(காண்க:அப்போஸ்தலர் 6:5; 11:19,20,22,26,27; 13:1,13; 14:19,21,26; 15:22,23,30,35; 18:12). 
      மேலும் கலாத்தியருக்கு பவுல் எழுதிய நிருபத்திலும் தீமோத்தேயு வுக்கு எழுதிய இரண்டாம் நிருபத்திலும் அந்தியோகியா பற்றிய குறிப்புகள் உண்டு. சிறப்பாக, அந்தியோகியாவில்தான் முதன்முறையாக, இயேசுவைப் பின்பற்றிய மக்கள் "கிறிஸ்தவர்கள்" என்னும் பெயரால் அழைக்கப்படத் தொடங்கினர். அது பற்றிய குறிப்பு இதோ:

"பர்னபா சவுலைத் தேடி தர்சு நகர் சென்றார்; அவரைக் கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்து வந்தார். அவர்கள் ஓராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந் திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள். அந்தியோகியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள் (அப்போஸ்தலர் 11:25-26)." 526 இல் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தின்போது அந்தியோகியாவும் அதன் துறைமுக நகரான செலூக்கியாவும் பெரும் அழிவைச் சந்தித்தன. முதலாம் ஜஸ்டீனியன் மன்னன் அந்தியோகியாவுக்குக் "கடவுளின் நகர்" என்று பொருள்படும் "தியோப்பொலிஸ்" (Theopolis) என்னும் பெயரைக் கொடுத்தார். அவர் காலத்தில் பல கட்டடங்கள் சீரமைக்கப்பட்டன. கி.பி. 531இலிருந்து 579 வரை ஆட்சிசெய்த முதலாம் கொஸ்ரோ (Khosrau I) அந்தியோகியாவைத் தாக்கியதோடு அங்கு வாழ்ந்த சுமார் 3 இலட்சம் கிறிஸ்தவர்களைக் கொன்றார். அதன்பிறகு அந்தியோகியாவின் புகழ் சிறிது சிறிதாக மங்கத் தொடங்கியது.

Search Tags
Antioch
Paul
Parnapa
Peter
Turkey


{ 2 comments... read them below or Comment }

  1. Dear Brother,
    This article is highly informative. So far I thought the Antioch is situated in Israel. But today only I understand the city is in Turkey and the Christianity started in this city. I expect more such articles from you

    ReplyDelete
  2. Dear brother, the historical events can be read but the knowledge of place that event happens is important to understand and stick to it on mind. Thank you for your information

    ReplyDelete

- Copyright © Gospel World - Skyblue - Powered by Blogger - Designed by Johanes Djogan -