- Back to Home »
- Lyrics »
- Kartharin Anbai Nan Kanden - கர்த்தரின் அன்பை நான் கண்டேன்--Dr.N.Gunasegar
Posted by : Guna
Sunday, October 5, 2014
பல்லவி
கர்த்தரின் அன்பை நான் கண்டேன்
கர்த்தரின் சாயல் நான் கொண்டேன்
அனுபல்லவி
நேசர் கொடி நிழல் பாசமாகவே
வீசிட கண்டேன் நான்
நீசன் என் மேலே
சரணங்கள்
1. உலகோர் மன இருள் போக்க
உலகிற்கு ஒளியாய் வந்தீர்
இருண்ட ஜீவியம்
வருந்தி ஏற்றதால்
அரும்பெரும் கிருபைகளை
இழந்தேன் வாழ்க்கையிலே -- -உலகோர்
2. சிறுவர்கள் எனது பிரியம்
மறவாதீர் என்றுரைத்தீரே
பரலோக இராஜ்ஜியம்
சிறுவர்க்கே உரியதாம்
குழந்தையாய் மாறிடுவேன்
அதை நான் பெற்றிடுவேன் -- சிறுவர்கள்
3. இரத்தம் சிந்துதலில்லாமல்
இரட்சிப்பு இல்லை என்றீரே
சிலுவை கொடி மரம்
பெற்றிடுவேன் இரட்சகா
காத்திடுமேன்
இரட்சகா - இரத்தம்