- Back to Home »
- Lyrics »
- Sthothiram Yaesu Theva - ஸ்தோத்திரம் இயேசு - பூவன்கோடு கன்வென்சன்
Posted by : Guna
Thursday, October 16, 2014
பாடல் - 15
பல்லவி
ஸ்தோத்திரம் இயேசு தேவா
ஸ்தோத்திரமே நாதா ஆ! ஆ!!
ஸ்தோத்திரம் தேவா
சரணங்கள்
1. அன்புடன் அருளும் ஆழ்ந்த கிருபையும்
என் போல் ஈனருக்காமோ - ஆ!
உன் போல் ஒருவரையும் உலகெங்கும் காணேன்
தன் உயிர் தந்த தயாளா - ஆ! ஆ!!
2. மீட்பின் செயலால் மீண்டும் பிறக்கா
ஆட்கொண்ட அருள் நிறை வேதா
காட்டினீர் கருணை கல்வாரி தனிலே
நாட்டினீர் என்னில் உம் அன்பை – ஆ! ஆ!!
3. துன்மார்க்கம் நிறை துரோகியாம் என்னை நீர்
நல் மார்க்கம் தன்னில் சேர்த்தீர்
என் மார்க்கம் இனி இல்லையே ஏதும்
உம் மார்க்கம் ஒன்றே போதும் - ஆ! ஆ!!
4. இருள்தனை நீக்கி இருதயத்தில் இருந்ததாம்
மருள்தனை மாற்றிய மன்னா
அருள் ஒளி வீச அகம் வந்த ராஜா
திருவழி திறந்த தியாகா - ஆ! ஆ!!