- Back to Home »
- Lyrics »
- Malaikalin Naduve Veezhnthidum Aruvikal - மலைகளின் நடுவே வீழ்ந்திடும் அருவிகள்---Unknown
Posted by : Guna
Sunday, October 5, 2014
சரணங்கள்
1. மலைகளின் நடுவே வீழ்ந்திடும் அருவிகள்
கண்களைக் கவர்ந்திடுதே
வாழ்க்கையின் நடுவே இயேசுவின் அன்பு
அருவியாய் பாய்ந்திடுதே
குரங்குகள் பறவைகள் அருவிகள் சத்தம்
செவிகளில் தொனித்திடுதே
கூக்குரல் நடுவே அன்பரின் குரலும்
உள்ளத்தில் தொனித்திடுதே
பல்லவி
நான் கண்ட இன்ப வாழ்வு
இயேசுவால் அடைந்த வாழ்வு
கல்வாரி அன்பால் பாவங்கள் தீர்ந்த
நீடிய சுக வாழ்வு
ஆஹா....ஹா....ஹா, ஓஹோ....ஹோ....ஹோ
லாலா.......ல.....லா.....லா....லா, ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்
2. வானத்தில் மிதந்திடும் விண்ணொளி
தீபங்கள்
இரவுக்கு அழகு தரும்
வானவர் இயேசுவின் திருமறை வசனங்கள்
உள்ளத்தில் ஒளியை தரும்
கடலின் அலைகள் சீறி எழுந்து
தாமாக அடங்கி விடும்
கடவுளின் பிள்ளைகள் வாழ்வினில்
புயல்கள்
எளிதினில் ஒடுங்கி விடும் - நான்
கண்ட