- Back to Home »
- Lyrics »
- Iraivan Thantha Varththai - இறைவன் தந்த வார்த்தை--லுத்தரன் சபை VBS பாடல்
Posted by : Guna
Tuesday, October 7, 2014
பாடல் - 11
பல்லவி
இறைவன் தந்த வார்த்தை
இயேசுவின் வடிவானதே – அவர்
பேசும் எந்த சொல்லும்
வாழ்வின் வழியானதே
சரணங்கள்
1. யாவீரு
மகளான சிறுமியும்
நாயீனூர் விதவையின் மைந்தனும்
லாசரு எனும் ஓர் நண்பனும்
உயிரோடு எழுந்திட உதவினார்
ஒளியும் வாய்மையும் இயேசுவே
வழியும் வாழ்வும் இயேசுவே - இறைவன்
2. தொழு
நோய் கொடுமைகள் தீரவே
அழிவின் பேய்கள் ஓடவே
உடலின் குறைகள் மாறவே
இறைவன் இயேசு உதவினார்
ஒளியும் வாய்மையும் இயேசுவே
வழியும் வாழ்வும் இயேசுவே - இறைவன்