Posted by : Guna Saturday, November 29, 2014


பாடல் - 18
பல்லவி
ஆரிரரோ அரிராரிரரோ
ஆதி சுதா அரிராரிரரோ
ஆரமுதே அரிராரிரரோ (2)
                          அனுபல்லவி
பாரிரவில் குளிர் பனியில்
பாலகனாய் பாரில் வந்த
பரமனே ஆரிராரிரரோ      -           ஆரிரரோ
சரணங்கள்
1.   அன்று வார்த்தையில் இருந்த தேவா
     இன்று மாமிசமாய் வந்தவா
     என்றும் எங்கள் உள்ளங்களிலே       
     நின்றுமது வரங்களையே தந்து நிரப்பிடும் ஆதிசுதா  - ஆரிரரோ                                                    -          
2.   கொட்டும் பனிமழை வாடைதனில்
     மாட்டுக்குடினிலில் புல்லணையில்
     மட்டில்லா அன்புடனே இரட்டிப்பான நன்மை தர
     இரட்சகனாய் உலகில் வந்தவா         -           ஆரிரரோ

3.   விண்ணின் மகிமைதனைத் துறந்து
     மண்ணுள்ளோர் மேல் பரிதாபம் கொண்டு
     எண்ணில்லா தூதர்களும் பண்ணுடனே வாழ்த்திசைக்க
     மண்ணுலகில் பாலனாய் வந்தவா   -           ஆரிரரோ

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © Gospel World - Skyblue - Powered by Blogger - Designed by Johanes Djogan -