Posted by : Guna Sunday, November 9, 2014


             பாடல் – 17

           பல்லவி

   பெலமளித்தெமைப் புது வழிகளில் நடத்திட
   தாரகம் நீரல்லவோ (3)

        அனுபல்லவி

   தாரணியில் எமக்குத் தயை புரிந்திடும்
   இயேசு நாயகன் நீரல்லவோ

        சரணங்கள்

1.    இருவரொருமித்தெம்மை வரவழைத்திடல்
   திரு சமுகமளிப்பேன் என்றீரே  (3)
   நீரன்றி எமக்கேது வீரமுலகிலுண்டு
   விரைந்து எழுந்திடுவீரே           -        பெலமளி

2.    அதிசயமானவர் என்பதுமது பெயர்
   அதிசயம் விளங்கச் செய்யுமே  (3)
   இது சமயம் உமது இதயம் விரும்புவதை
   இறைவா விளங்கச் செய்யுமே     -        பெலமளி

3.    பாவிகளுமதண்டை சேரும் உணர்வடைந்து
   தாகமுடன் அண்டிட  (3)
   நாவின் அறிக்கையினால் நவீன இதயம் பெற்று
   நாதனைப் பின் சென்றிட           -        பெலமளி

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © Gospel World - Skyblue - Powered by Blogger - Designed by Johanes Djogan -