- Back to Home »
- Lyrics »
- En Belanakiya Karthavae - என் பெலனாகியக் கர்த்தாவே (MP3 பாடல் ) Author - Unknown
Posted by : Guna
Sunday, November 2, 2014
பாடல் – 16
பல்லவி
என் பெலனாகியக் கர்த்தாவே
உம்மை நான் நேசிக்கிறேன்
எந்தன் நெருக்கத்திலே என் சத்தமதை
நீர் கேட்டுப் பதிலளித்தீர்
சரணங்கள்
1. என் கன்மலையும் என் கோட்டையும்
என் இரட்சகரும் என் தேவனும் நீர்
நான் நம்பிடும் என் துரூகமே
எந்தன் இரட்சண்ய கொம்பும் நீரே - என்
2. சிறுமைப்படும் மனிதனே கலங்கிடாதே
சீக்கிரம் நம் இயேசு வந்திடுவார்
மேட்டிமை மனிதற்கு நீ பயந்திடாதே
மேசியா என்றும் துணையானதால் - என்
3. இரட்சிப்பின் கேடகம் எனக்குத் தந்தார்
நீதி என்னும் சால்வையை உடுத்துவித்தார்
கர்த்தர் பெலத்தால் மதிலைத் தாண்டிடுவேன்
அவர் வலக்கரம் நம்மைத் தாங்கிடுமே- என்