- Back to Home »
- Bible places »
- Capharnaum - கப்பர்நகூம் - இயேசுவின் பணி மையம் - Author - Dr.N.Gunasegar - Reference - Wikipedia
Posted by : Guna
Wednesday, December 10, 2014
கப்பர்நகூம்
கப்பர்நகூம் அல்லது
“நாகும் நகர்” என்பது பரிசுத்த வேதாகமத்தோடு தொடர்புடைய, தற்போது
பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள ஒரு ஊர் ஆகும். இந்த ஊர் கலிலேயாக் கடல் என்று அழைக்கப்படுகின்ற கெனசரேத்து ஏரியின் கரையில் அமைந்துள்ள ஒரு
அழகிய ஊராகும். இங்கு சுமார் 1500 மக்கள் வாழ்ந்து வந்ததாகச் சரித்திரச் சான்றுகள்
மூலம் தெரிய வருகிறது. அங்குள்ளவர்களின் முக்கியத் தொழில் மீன்பிடித்தல் ஆகும்..
அகழ்வாய்வு சான்றுகள்படி,
இங்கு ஒன்றன்மேல் ஒன்றாகக் கட்டப்பட்ட இரண்டு யூத தொழுகைக்கூடங்கள்
இருந்த்தாகத் தெரிய வருகிறது. கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பின் கப்பர்நகூமின் சிறப்பும் புகழும்
மங்கத்தொடங்கியது. ஆனால் 19ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஆகழாய்வுகளின் பயனாக இன்று
அதன் சீரும் சிறப்பும் வெளியுலகிற்குத் தெரியவந்துள்ளன. இந்த ஊரின் அருகில் உள்ள
ஒரு கிறிஸ்தவ ஆலையம் இருந்ததாகக் வரலாற்றுக் குறிப்புகள் மூலம் தெரிய வருகிறது.
அவ்வாலயம் முன்னாளில் புனித பேதுருவின் வீடாக இருந்திருக்கலாம்
என்றும் கருதப்படுகிறது.\
To know further about Capharnaum please click the link