Powered by Blogger.

Blog Archive

Archive for 2014

Yesu Kiristhuvin Vetha Puththakam - இயேசு கிறிஸ்துவின் வேதப்புத்தகம்(Traditional Gospel Song)


                              பாடல் – 19                         சரணங்கள்

    1.    இயேசு கிறிஸ்துவின் வேதப்புத்தகம்
            இன்றும் என்றும் எந்தன் இன்பப் புத்தகம்
    இன்னல் வேளை என்னைத் தேற்றும் புத்தகம்
    இரண்டு ஏற்பாடுகள் கொண்டப் புத்தகம்
பழைய ஏற்பாட்டில் முப்பத்தொன்பது
புதிய ஏற்பாட்டில் இருபத்தேழு
புத்தகங்கள் கொண்ட்து மெத்தவுமே நல்லது
நித்தம் நித்தம் படித்தால் தித்தித்திடுமே – இது      
2.       ஆதியாகமம் யாத்ராகமம்
           லேவியராகமம் எண்ணாகமம்
            உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள்
            ரூத் I சாமுவேல் II சாமுவேல்
                    I இராஜாக்கள் II இராஜாக்கள்
                    I நாளாகமம் II நாளாகமம்
                   எஸ்ரா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம்
                   நீதிமொழிகள் ப்ரசங்கி உன்னதப்பாட்டு  -  இது
3.       ஏசாயா எரேமியா புலம்பல்
           எசேக்கியேல் தானியேல் ஓசியா
           ஆமோஸ் ஒபதியா யோனா
           மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா
              ஆகாய் சகரியா மல்கியா
              ஆக மொத்தம் முப்பத்தோன்பது ஐயா
              பழைய ஏற்பாடுப் படிக்க நீ நாடு
              பரமப்பிதா உன்னை ஆசீர்வதிப்பார்    - உன்னை
4.     இயேசு கிறிஸ்துவின் வேதப்புத்தகம்
         இன்றும் என்றும் எந்தன் இன்பப் புத்தகம்
         இன்னல் வேளை என்னைத் தேற்றும் புத்தகம்
         இரண்டு ஏற்பாடுகள் கொண்டப் புத்தகம்
மத்தேயு மாற்கு லூக்கா யோவான்அப்போஸ்தலர்
ரோமர் I கொரிந்தியர் II கொரிந்தியர்
கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசேயர்
I தெசலோனிக்யர் II தெசலோனிக்கேயர் - இரண்டு
5.    I தீமோத்தேயு II தீமோத்தேயு
தீத்து பிலமோன் எபிரேயர்
யாக்கோபு I பேதுரு II பேதுரு
I யோவான் II யோவான் III யோவான்
            யூதா வெளிப்படுத்தின விசேஷம் இயேசு
            நாதரைப் பற்றிய சுவிசேஷம்
            புதிய ஏற்பாடுப் படிக்க நீ நாடு
            பரமப்பிதா உன்னை ஆசீர்வதிப்பார்          - உன்னை
Tag : ,

- Copyright © Gospel World - Skyblue - Powered by Blogger - Designed by Johanes Djogan -