- Back to Home »
- Lyrics »
- Vareero Van Pathiyae - வாரீரோ வான்பதியே சேரீரோ திருமதியே--பூவன்கோடு கன்வென்சன் பாடல்கள்(1965-1970)
Posted by : Guna
Thursday, October 9, 2014
பல்லவி
வாரீரோ வான்பதியே சேரீரோ திருமதியே
தீரீரோ எம் குறைவை தாரீரோ உம் நிறைவை
சரணங்கள்
1. பூ உலகில் போற்றும் உம்மை
புகழ்ந்து மேலோகில் வாழ்த்த எம்மை
தீ உலகில் நின்று தீவிரமாய்
சேர்த்துக் கொள்வீரே உம்மிடமாய் - வாரீரோ
2. கண்டதில்லை நேர் முகமாய்
கல்வாரியின் காந்தனை நாம்
கண்டிடவே முகமுகமாய்
கர்த்தா உன் சாயல் முழுமையுமாய் – வாரீரோ
3. காயம் கொண்ட கால் கரமும்
கருணை பொங்கும் விலாபுரமும்
நேயன் உன் அங்க மகத்துவமாம்
நீர் வரும் போதுள்ளம் பொங்கிடுமாம் – வாரீரோ
4. இருப்பதுவும் நாம் இவ்வுலகில்
இயேசுவே உம் மா தயவில்
விருப்பம் முழுவதும் உம் வரவில்
வேந்தனே வாருமே நீர் விரைவில் – வாரீரோ
5. இயேசுவே எம் இன்ப முகம்
ஏழையாம் காண மகிழும் முகம்
வீசும் மின்னொளியென விசும்பினில் நீர்
வேகமே வந்தெம்மை சேர்த்துக் கொள்வீர் – வாரீரோ