Posted by : Guna Sunday, October 5, 2014


            பாடல் - 4

            பல்லவி

புதுக்கிருபை அளித்திடுமே
புது பெலனும் தந்திடுமே
புது ஜீவன் புது பெலனும்
எந்தன் இயேசுவே தந்திடுமே

          சரணங்கள்

1.       பரதேசியாகத் திரிந்தேனைய்யா நான்
    பாசமாய்த் தேடினீரே
    இதுகாறும் காத்தீர் இனியும் நடத்தும்
    இயேசுவே இரட்சகனே             -         அல்லேலூயா

2.      ஆண்டாண்டு காலங்கள் அறியாமல் போனேன்
ஆண்டவர் அன்பினையே
வேண்டாதவைகளை விலக்கிடவே
உந்தன் வழிதனை போதியுமே      -         அல்லேலூயா

3.       உம் சித்தம் செய்ய உம்மைப் போல் மாற
வல்லமை தந்திடுமே
இம்மட்டும் காத்த இம்மானுவேலே
இனியும் நடத்திடுமே              -         அல்லேலூயா

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © Gospel World - Skyblue - Powered by Blogger - Designed by Johanes Djogan -