Posted by : Guna Sunday, October 5, 2014


                      

                     பாடல் - 5

                     பல்லவி

தேவசுதன் கிறிஸ்தேசு எமை மீட்கவே வந்தார்
ஏழையராய் பாவிகட்கோர் இரட்சகராய் நிற்பார் (2)

          சரணங்கள்

1.       அன்பினுக்கு அன்பாக அவனியில் வந்துதித்தார்
அன்று பல வான் தூதர் ஆர்ப்பரித்தேப் பாட
அவனியில் பலவும் அதிசயம் நிகழ
அருமையாய் வந்துதித்தார் (2)         -        தேவ

2.       பாவத்தால் நொந்தவர்க்கு பரம வைத்தியரானார்
ஏதுமற்ற ஏழைகட்கு இருநிதியானாரே
துன்புறுவோர்க்கு துன்பங்கள் துடைத்து
துணைவராய் அணைத்திடவே (2)      -        தேவ

3.       இவ்வுலகோர் ஈடேற பரகதி விட்டு வந்தார்
    செவ்விய நல் உபதேசம் சீர் பெற அளித்திடவே
    இனியராய் இரங்கி நலமது புரிய
    நாடியே வந்தனரே (2)                 -        தேவ

4.       தன்னுயிரைப் பலி கொடுத்து நரர் உயிர் காத்திடவே
    பாவிகளைப் பரிவுடனே பரலோகம் சேர்த்திடவே
    கருணையின் கோனே காசரு மணியே
    கனிவோடு அருள் புரிவீர் (2)          -        தேவ

5.       பொல்லாத சிந்தைகளால் நிறைந்திட்ட உள்ளமதை
    நல்வழிக்காய் திறந்து வைத்தால் இயேசதில் புகுந்திடுவார்
    பாவங்கள் நீங்க பரிசுத்தப்படுத்தி
    பாங்குடன் தாங்கிடுவார் (2)          -        தேவ

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © Gospel World - Skyblue - Powered by Blogger - Designed by Johanes Djogan -